உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவித்துறையில் பரிகாரபூஜை

குருவித்துறையில் பரிகாரபூஜை

குருவித்துறை: குருவித்துறை சுயம்பு குருபகவான் கோயிலில் லட்சார்ச்சனையை முன்னிட்டு பக்தர்களுக்காக 48 நாட்கள் பரிகாரபூஜை நடக்கிறது. சோழவந்தான் குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோயிலில் அமைந்த சுயம்பு குருபகவான் கோயிலில் மே21 ல் குருபெயர்ச்சி விழா நடந்தது. அனைத்து ராசிக்காரர்களுக்கும் குருபெயர்ச்சியை ஒட்டி 3 நாட்கள் லட்சார்ச்சனை நடந்தது. இதில் பங்கேற்காத பக்தர்கள் பரிகார பூஜை வேண்டி கோயில் நிர்வாகத்திடம் கோரினர். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்ற நிர்வாகம் சார்பில் நேற்று முதல் பரிகார பூஜை 48 நாட்கள் நடக்கிறது. இந்த பூஜையில் பங்கேற்கும் பக்தர்களுக்கும் 2 கிராம் வெள்ளி டாலர், பிரசாதம் வழங்கப்படும். கோயில் நிர்வாக அதிகாரி சக்கரயம்மாள், ஊழியர் வெங்கடேஷன் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !