உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்தில் ஆடிவரும் தேருக்குஅழகு சேர்க்கப் போறாங்க

குன்றத்தில் ஆடிவரும் தேருக்குஅழகு சேர்க்கப் போறாங்க

திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான பெரிய வைரத்தேர், முதல் முறையாக சீரமைக்கப்பட உள்ளது. திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனித் திருவிழாவின்போது, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் முடிந்த மறுநாள் கோயில் முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் தேரில் எழுந்தருளி, பக்தர்கள் வடம்பிடிக்க கிரிவீதியில் தேரோட்டம் நடைபெறும். இத்தேர் நான்கு அடுக்குகளுடன் இருபத்து இரண்டேகால் அடி உயரம், இருபத்து இரண்டரை அடி அகலம், நான்கரை டன் எடை கொண்டது. 400க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. உருவான நாள் முதல் 6 மரச்சக்கரங்களால் பவனி வந்தது. 1991ல் ரூ.மூன்றரை லட்சம் செலவில் 4 இரும்பு சக்கரங்கள் பொறுத்தப்பட்டன. தேர் வலம்வரும் போது, வேகத்தை சீராக்க, 2 ஆண்டுக்கு முன் ரூ. ஒன்றரை லட்சத்தில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டது.

இத்தேர் உருவாக்கப்பட்டு பல நூறு ஆண்டுகளாகி விட்டதால், அனைத்து பகுதிகளும் பழுதடைந்து, தேரோட்டத்தின்போது, பாகங்கள் ஆட்டம் காண்கின்றன. சிற்பங்களும் பழுதடைந்துள்ளன. பழமைவாய்ந்த இத்தேரை சீரமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, பூம்புகார் ஸ்தபதி வேலாயுதம் தலைமையில், ஸ்தபதிகள் ஆய்வு செய்தனர். கோயில் துணை கமிஷனர் செந்தில் வேலவன் கூறுகையில், ஸ்தபதிகளால் எஸ்டிமேட் தயாரிக்கப்பட்டவுடன், அரசின் அனுமதி பெற்று, பழமை மாறாமல், கோயில் நிதியிலிருந்து தேர் சீரமைப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !