மதுராவில் கம்ச விழா கோலாகலம்
ADDED :1773 days ago
உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தின் மதுராவில் அரசர் கம்சனை கிருஷ்ணர் வதம் செய்ததை நினைவு படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ‘கம்ச விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் ஒரு சடங்காக நேற்று கம்சனின் உருவப் பொம்மையை பிரம்பால் அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான மக்கள் கலந்த கொண்டு வழிபாடு செய்தனர்.