பழநியில் பக்தர்களுக்கு வின்ச் இயக்கப்படுமா
ADDED :1818 days ago
பழநி, : பழநி மலைக் கோயிலில் சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக 10 முதல் 60 வயது வரையே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் வெளியூர் பக்தர்கள், சிறுவர்களை மண்டபத்தில் பாதுகாப்பில் விட்டுவிட்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் வெளியூர் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ள 5 வயது குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர்.கைக்குழந்தைகளுக்கு அனுமதியில்லை. மலைக்கோயில் வரும் பக்தர்களுக்கு சமூக இடைவெளியுடன் வின்ச், ரோப்கார் இயக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.