ரங்கநாத பெருமாள் கோவிலில் திருமாங்கல்ய பூஜை
ADDED :1922 days ago
பொள்ளாச்சி : ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், திருமாங்கல்யம் சிறப்பு பூஜை நடந்தது.
விழாவையொட்டி, மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷகம் நடந்தது. துளசி, அரளி, மல்லிகை, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட, ஒன்பது வகையான பூ அலங்கார பூஜை நடந்தது.திருமாங்கல்யம் தங்கத்திலும், கட்டுக்கம்பி வெள்ளியிலும் புதியதாக செய்து தரப்பட்டு பூஜை நடந்தது. ஒன்பது வகை கனிகளை கொண்டு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள், சமூக இடைவெளி பின்பற்றி பங்கேற்றனர்.