உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்ம தீர்த்தத்தில் உற்சவம் நடத்த தெப்பம் கட்டுமான பணி தீவிரம்

பிரம்ம தீர்த்தத்தில் உற்சவம் நடத்த தெப்பம் கட்டுமான பணி தீவிரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், முதன் முறையாக பிரம்ம தீர்த்தத்தில் தெப்பம் உற்சவம் நடக்க உள்ளது. அதற்காக தெப்பம் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீப திருவிழா முடிந்து, தொடர்ந்து மூன்று நாட்கள், வழக்கமாக கோவிலுக்கு வெளியே உள்ள, அய்யங்குளத்தில் தெப்பம் உற்சவம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தடை உத்தரவால், கோவிலின் வெளியே விழா நடத்த தடை விதிக்கப்பட்டு, கோவில் வளாகத்துக்குள்ளே அனைத்து விழாக்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி, அய்யங்குளத்தில் நடத்த வேண்டிய தெப்ப உற்சவம், பிரம்ம தீர்த்த குளத்தில் நடத்தப்பட உள்ளது. இதற்காக, பிரம்ம தீர்த்த குளத்தில், தெப்பம் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில், வரும், 30ல், சந்திரசேகரர், டிச.,1ல், பராசக்தி அம்மன், டிச.,2ல், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் தெப்பம் உற்சவம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !