உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. திண்டுக்கல் அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர், மேற்கு ரத வீதி சிவலிங்கேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. சமூக இடைவெளியை பின்பற்றி ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தாண்டிக்குடி: பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமானோர் தரிசனம் செய்தனர். முன்னதாக பண்ணைக்காடு மயான காளியம்மன் கோயில் சிவன் கோயிலும் விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !