திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீர்த்த உற்ஸவம்
ADDED :2122 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் தீர்த்த உற்ஸவம் நடந்தது.
இக்கோயிலில் நவ.,15ல் துவங்கிய திருவிழாவில் நேற்று முன் தினம் மலை மீது மஹா தீபம் ஏற்றப்பட்டது. நேற்றுதீர்த்த உற்ஸவத்தை முன்னிட்டு உற்ஸவர் சன்னதியில் விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன், சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், அஸ்தரதேவர் எழுந்தருளினர். கொடியேற்றம் துவங்கி நேற்று காலை வரை யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரால், உற்ஸவர்களுக்கு அபிஷேகம் நடந்தது.பூஜை முடிந்து சரவணப் பொய்கையில் எழுந்தருளியுள்ள ஆறுமுக சுவாமி சன்னதியில் யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் முடிந்து அஸ்தரதேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது.