உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் 168வது ஜெயந்தி விழா

அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் 168வது ஜெயந்தி விழா

தஞ்சாவூர்: தஞ்சாவூர், ராமகிருஷ்ண மடத்தில் அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் 168-வது ஜெயந்தி விழா ஜனவரி 5ம் தேதி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, முன்னிட்டு, கீழ்கண்ட தலைப்புகளில் கட்டுரை போட்டி இணைய வழியில் (ON Ll NE ல்) நடைபெறுகிறது

1. ஸ்ரீ சாரதாம்மாவிடம் என் பிரார்த்தனை
2.என் வாழ்வில் நான் பின்பற்றும் அன்னையின் ஓர் உபதேசம்
3. இதனால் தான் சாரதாம்மாவை பிடிக்கும்
4. எனது கஷ்டமான நேரத்தில் ஸ்ரீ சாரதை என்னை எப்படிக்காப்பாற்றினார்
5. பிறரது குறை காணாதே, உன் மன அமைதி நிலைக்கும்
6. தாய் ஒருத்தி நான் உனக்காக இருக்கிறேன்
7. கடிகாரம் துடிப்பது போல் உன் இதயம் இறைநாமத்தால் துடித்தால் உனக்கு ஆன்மீகத்தில் வெற்றி நிச்சயம்
8. அன்பால் உலகை உனதாக்கிக்கொள் – ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதலாம் அல்லது வீடியோவில் பேசியும் அனுப்பலாம். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும், அனைவருக்கும் சான்றிதழ்களும் உண்டு.

கட்டுரைகள் வந்து தேர வேண்டிய கடைசி நாள்: 15.12.2020
அனுப்ப வேண்டிய முகவரி: http://bitly.ws/aFNG


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !