உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் கோயில்களில் சோமவார வழிபாடு

திண்டுக்கல் கோயில்களில் சோமவார வழிபாடு

திண்டுக்கல் : கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் சங்காபிேஷக பூஜைகள் நடந்தது. திண்டுக்கல் அபிராமியம்மன், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, சத்திரம் தெரு செல்வ விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், கூட்டுறவு நகர் செல்வ விநாயகர், கிழக்கு ரத வீதி லிங்கேஸ்வரர் கோயில்களில் சோமவாரத்தை முன்னிட்டு யாகத்துடன் 108 சங்குகள் வைத்து சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !