உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னசேலம் கோவில்களில் கார்த்திகை தீப விழா

சின்னசேலம் கோவில்களில் கார்த்திகை தீப விழா

சின்னசேலம்; சின்னசேலம் பகுதிகளில் உள்ள கோவில்களில் கார்த்திகை தீப விழா நடந்தது.அதனையொட்டி, சின்னசேலம் நகர பகுதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மூலவருக்கு தங்க கவசத்தால் அலங்காரம் செய்து, வேள்வி பூஜை நடத்தப்பட்டது. விஜயபுரம் செல்வ விநாயகர் கோவிலில் முருகர், வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.இதே போன்று, சிவன் கோவிலில் பஞ்ச மூர்த்திகளுக்கு வேள்வி பூஜை மற்றும் கார்த்திகை தீப கிருத்திகை நட்சத்திரத்திற்குண்டான பூஜை நடைபெற்றது.உலகியநல்லுார், தென்பொன்பரப்பி, செட்டியந்துார், கூகையூரில் உள்ள கோவில்களில் நடந்த பூஜைகளில் ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !