மேலும் செய்திகள்
திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா
1761 days ago
பிரம்மாகுமாரிகள் ராஜயோக நிலையத்தில் சிறப்பு தியானம்
1761 days ago
கரூர்: கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு, நேரடியாக பொதுமக்கள் வருவதை தவித்து, டிவியில் பார்க்கலாம் என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், நாளை மறுநாள் (டிச.,4) ஆகம விதிப்படி நடக்கிறது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடக்கும். கொரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இங்கு நடக்கும் அனைத்தும் நிகழ்வுகளும் உள்ளுர் டிவி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. எனவே, பொது மக்கள் கோவிலுக்கு வருவதை தவிர்த்து, வீட்டிலேயே இருந்து கண்டுகளிக்க வேண்டும். குறிப்பாக, 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
1761 days ago
1761 days ago