கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் புஷ்ப யாகம்
ADDED :1777 days ago
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நிறைவையொட்டி புஷ்ப யாகம் நேற்று முன்தினம் மாலை நடந்தது.அதனையொட்டி, பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சர்வ அலங்காரத்துடன் மண்டபத்தில் எழுந்தருளினர். கலசம் ஆவாகணம், புஷ்ப யாகம் செய்து, பூர்ணாஹூதி சேர்ப்பித்தனர். அதனைத் தொடர்ந்து பெருமாள், தாயாருக்கு கலசாபிேஷகம் செய்து, புஷ்ப யாகம் நடந்தது. தேசிக பட்டர் குழுவினர் பூஜைகளை செய்தனர். நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்றனர்.