உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஹோமம்

தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஹோமம்

வாலாஜாபேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், உலக மக்கள் நன்மைக்காகவும், நோய்கள் விலகவும் நேற்று காலை, 6:00 மணிக்கு, ஒரு லட்சம்  கடுக்காய்கள் கொண்டு, தன்வந்திரி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, 100 கட்டு அருகம் புல்லால் கணபதி ஹோமம் நடந்தது. பின்னர், சரபேஸ்வரர் கோவில் மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு,  சரபேஸ்வரர் ஹோமம், சிறப்பு அபிஷேகம், பஞ்சமுக வராஹி ஹோமம், பஞ்ச திரவிய அபிஷேகம், பஞ்ச தீப வழிபாடு, ஸ்வர்ண சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜையும், மங்கள சனீஸ்வருக்கு  தைலாபிஷேகமும் நடந்தது. இதில், முரளிதர சுவாமிகள் தலைமையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !