சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சஷ்டி விழா
ADDED :2132 days ago
சின்னாளபட்டி : கார்த்திகை சஷ்டியை முன்னிட்டு, சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக வள்ளி, தெய்வானை சமேத மூலவர், சதுர்முக முருகனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. சிறப்பு அபிஷேகம், சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.