வலம்புரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2101 days ago
வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே பெருமாள்பட்டியில் வலம்புரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன.நேற்று காலை சிறப்பு தீபாராதனைக்கு பின் பட்டர் பிரசாத் சர்மா தலைமையில் புனிதநீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். பின் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.