உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா பிரத்தியங்கரா காளிக்கு அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி!

மகா பிரத்தியங்கரா காளிக்கு அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி!

புதுச்சேரி : மகா பிரத்தியங்கரா காளிக்கு அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி அபிஷேகம் நேற்று நடந்தது. புதுச்சேரி - திண்டிவனம் நான்கு வழிச்சாலையில் மொரட்டாண்டியில் மகா பிரத்தியங்கரா காளி கோவில் உள்ளது. இங்கு உலகிலேயே உர உயரமான 72 அடி உயரம் கொண்ட மகா பிரத்தியங்கரா காளி சிலை உள்ளது. இக்கோவிலில் உலக நன்மைக்காக அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்திக்காக, 24 மணிநேர மகா அபிஷேகம் நேற்று காலை 6 மணிக்கு துவங்கியது. கங்கை நீர் 108 லிட்டர், 108 லிட்டர் நல்லெண்ணெய், 108 லிட்டர் கரும்பு ஜூஸ், பானகம் 108 லிட்டர், 25 கிலோ சீயக்காய் தூள், தலா 108 கிலோ பச்சரிசி மாவு, பைத்தம் மாவு, கஸ்தூரி மஞ்சள் தூள், குங்குமம், வெள்ளரி பிஞ்சு, வெள்ளரி பழம் உள்ளிட்ட 42 வகையான பொருட்களைக் கொண்டு இந்த மகா அபிஷேகம் நடந்தது. பால் 1008 லிட்டர் , வாசனை வண்ண மலர்கள் 1008, தயிர் 1008 லிட்டர், இளநீர் 1008, எலுமிச்சம்பழம் மற்றும் நார்த்தங்காய் 1008, இனிப்பு மற்றும் கார வகைகள் 1008, பனை நொங்கு அன்னாபிஷேகம் 1008, பஞ்சாமிர்தம் பழவகைகள் 1008 ஆகிய பொருட்கள் பயன்படுத்தப் பட்டன.நடாதூர் ஜனார்த்தன சுவாமிகள் தலை மையில் அர்ச்சகர்கள் அபிஷேகம் செய்தனர். மகா அபிஷேகம் இன்று (29ம் தேதி) காலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !