புல்லாணி அம்மன் கோயிலில் பொங்கல் விழா
ADDED :1864 days ago
கீழக்கரை : மாயாகுளம் அருகே புல்லந்தை புல்லாணி அம்மன் கோயிலில் பொங்கல் உற்ஸவ விழா நடந்தது. மூலவர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியப் பொடிகளால் அபிஷேக, ஆராதனை நிறைவேற்றப்பட்டது. பெண்கள் பொங்கலிட்டனர். பக்தர்கள் மாவிளக்கு பூஜை செய்தனர்.