மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆய்வு
ADDED :1797 days ago
அவலுார்பேட்டை - மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி., ஆய்வு மேற்கொண்டார்.மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி செயல்பாட்டிலுள்ள பாதுகாப்புகள் குறித்து செக்யூரிட்டி பிரான்ச் எஸ்.பி., சுரேஷ்குமார் நேற்று ஆய்வு நடத்தினார்.ஆய்வின் போது அறநிலைய துறை உதவி ஆணையாளர் ராமு, செஞ்சி டி.எஸ்.பி., இளங்கோவன், வளத்தி இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, போலீசார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.