உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இனி அனைவரும் செல்லலாம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இனி அனைவரும் செல்லலாம்

திருப்பதி : கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் திருப்பதியில் ஜூன் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 55 வயதுக்கு மேற ்பட்ட முதியவர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. முதலில் 300 ரூபாய் கட்டண தரிசனத்திலும், பின்னர் இலவச தரிசனத்திலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டது. தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் வரை செல்கின்றனர். ஆனால் குழந்தைகளும், முதியவர்களும் அனுமதிக்கப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் குழந்தைகள் மற்றும் முதியவர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று குழந்தைகள் மற்றும் முதியவர்களை தரிசனம் செய்ய இன்று முதல் அனுமதியளித்தனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !