திண்டுக்கல் கோயில்களில் சங்காபிஷேக பூஜைகள்
ADDED :1837 days ago
திண்டுக்கல் : கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் சங்காபிஷேக பூஜைகள் நடந்தது.திண்டுக்கல் அபிராமியம்மன், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, சத்திரம் தெரு செல்வ விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், கூட்டுறவு நகர் செல்வ விநாயகர், நாகல் நகர் புவனேஸ்வரி, கிழக்கு ரத வீதி லிங்கேஸ்வரர் கோயில்களில் சோமவாரத்தை முன்னிட்டு யாகத்துடன் 108 சங்குகள் வைத்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.