இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :1836 days ago
சாத்தூர்; இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு அம்மனுக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணி முதல் சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. மதியம் ஒரு மணிக்கு அம்மனுக்கு சங்காபிஷேகம் செய்து சிறப்பு, அலங்காரம் பூஜைகள் நடந்தன. முன்னாள் பரம்பரை அறங்காவலர் குழுதலை வர் ராமமூர்த்தி பூஜாரி, உதவி ஆணை யர் கருணாகரன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சேத்துார்:திருக்கண்ணீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள், பாராயணம் நடந்தது. தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள்
நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதுபோல் மாவட்டத்தில் அனைத்து சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் நடந்தது.