அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் புதுச்சேரி முதல்வர் சுவாமி தரிசனம்
நாகை: தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் அருள்மிகு திருநேத்திர தச புஜ வீர ஆஞ்சநேய ஸ்வாமி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் இந்த கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபட்டால் சத்ரு உபாதைகள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெறும் இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆஞ்சநேயர் சுவாமியின் மூல நட்சத்திர தினமான இன்று காலை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆஞ்சநேய சுவாமிக்கு 150 லிட்டர் பால் தயிர் திரவிய பொடிகளை கொண்டு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார் பூஜைகளை மாதவன் பட்டாச்சாரியார் நடத்திவைத்தார் முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் புதுச்சேரி முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து அவர் ஆஞ்சநேயர் மூலவர் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார் அவருடன் அவரது மகன் சோமசுந்தரம் மருமகள் மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர் புதுச்சேரி முதல்வரின் வருகையை முன்னிட்டு கோவில் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.