உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம் விமரிசை

ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம் விமரிசை

செங்கல்பட்டு; செங்கல்பட்டில், ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், சங்காபிஷேக விழா, நேற்று, விமரிசையாக நடைபெற்றது.செங்கல்பட்டு, வ.உ.சி., தெருவில், புகழ் பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், சங்காபிஷேகம் நடைபெறும்.இந்த ஆண்டு, சோமவாரத்தையொட்டி, ஏகாம்பரேஸ்வரருக்கு, நேற்று, சங்காபிஷேக விழா நடந்தது. 1,008 சங்குகள், ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.உலக மக்கள் நலன் கருதியும், கொரோனா வைரஸ் தொற்று குறையவும், சிறப்பு யாகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !