உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் கொட்டும் மழையிலும் நாம சங்கீர்த்தனம்

தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் கொட்டும் மழையிலும் நாம சங்கீர்த்தனம்

 புதுச்சேரி: புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் கொட்டும் மழையிலும், நாம சங்கீர்த்தனம் நடந்தது.புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் மார்கழி மாதத்தையொட்டி முதல் நாள் நகர்வல நாம சங்கீர்த்தனம் நேற்று காலை 5.45 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலில் துவங்கியது.இதனை சங்கர் எம்.எல்.ஏ.,துவக்கி வைத்தார்.


தொடர்ந்து கீதாராம சாஸ்திரி தலைமையில் நாம சங்கீர்த்தனம் வேதபாடசாலை மாணவர்கள் வேதபாராயணத்துடன் கோவில் வளாகத்தில் இருந்து துவங்கியது.பாகவதர்கள் ஜெயராமன், சிவதாசன் தலைமையில் விஜயா, ஹேமா வெங்கட்ராமன், மகாலட்சுமி,புவனா வாசுதேவன், மைதிலி ரமணன், கிருபாகரன், பாலா, அய்யப்பன், சீத்தாராமன், அருணாசலம் ஆகியோர் அடங்கிய குழுவினர் கணபதி வந்தனம், குருவந்தனம் ஆகியவை முடித்து நாம சங்கீர்த்தனத்தை துவக்கினர்.கொட்டும் மழையிலும் நாம சங்கீர்த்தனம் கோவிலில் இருந்து புறப்பட்டு நேரு வீதி, செஞ்சி சாலை, அம்பலத்தடையார் வீதி வழியாக மீண்டும் மணக்குள வினாயகர் கோவிலில் காலை 7.30 மணிக்கு முடிந்தது.நகர்வல சங்கீர்த்தனத்தில் விநாயகர், முருகன், அம்மன், சிவன், விஷ்ணு, ராமர், பாண்டுரங்கன், கிருஷ்ணன், சிவன் பாடல்களும் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களும் பாடப்பட்டன.சமிதியின் உறுப்பினர்கள் வெங்கடேசன், கார்த்திகேயன், சீனிவாசன், உமாசங்கர், கணேசன், லட்சுமிநாராயணன், சீத்தாராமன், ரகோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நாளை 18 ம்தேதி ரெயின்போ நகர் எட்டாவது குறுக்கு தெரு சுமுக..விநாயகர் கோவிலில் காலை 5.45க்கு துவங்கி,மீண்டும் அந்த கோவிலிலேயே 7.30 மணிக்கு நிறைவு பெறுகின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !