கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: திறமையை வெளிப்படுத்துங்கள்
கடலில் சென்ற படகு ஒன்று புயலில் சிக்கி திசை மாறி விட்டது. ஆனால் படகோட்டிகள் போராடி உயிர் பிழைத்தனர். கடும் களைப்பால் தாகம் வாட்டியது. அப்போது எதிரே ஒரு படகு வர தண்ணீர் கேட்பதற்காக வெள்ளைக் கொடியை காட்டி அழைத்தனர். அந்தப் படகும் இவர்களை நெருங்கி வந்தது. தங்கள் நிலையைச் சொல்லி படகோட்டிகள் தண்ணீர் கேட்டனர்.
“நண்பர்களே! நீங்கள் கடலில் தான் செல்கிறீர்கள். ஆனால் நீங்கள் இப்போது இருப்பதோ கடலுக்குள் பாயும் அமேசான் நதிக்குள். இது நல்ல தண்ணீர். நீங்கள்சவேண்டுமளவு நல்ல
தண்ணீர் குடிக்கலாம்!” என பதிலளித்தனர். கடலுக்குள் நல்ல தண்ணீர் இருந்தும் படகோட்டிகளுக்கு உண்மை தெரியவில்லை. இது போல நமக்குள் திறமைகள் இருந்தும் அதை நாம் உணர்வதில்லை. நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள் என்பதையும்,தேவனுடைய ஆவி உங்களில் வாசம் செய்கிறது. என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.“இயேசு கிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனின் உள்ளத்தில் இருந்து ஜீவத் தண்ணீருக்குள்ள நதிகள் ஓடும்” என பைபிள் வசனம் குறிப்பிடுகிறது. திறமைகளைப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறுங்கள்.