உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விபீஷணருக்கு பட்டாபிஷேகம்: ராமேஸ்வரத்தில் சிறப்பு வைபவம்!

விபீஷணருக்கு பட்டாபிஷேகம்: ராமேஸ்வரத்தில் சிறப்பு வைபவம்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு நேற்று விபீஷணர் பட்டாபிஷே வைபவம் நடந்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவின் இரண்டாம் நாளான நேற்று, கோதண்டராமர் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேக விழா நடந்தது. அதிகாலை ஸ்ரீராமர், சீதாதேவி, லெட்சுமணர் மற்றும் விபீஷணர் உட்பட உற்சவ மூர்த்திகள் தங்க கேடயத்தில் ரதவீதியில் உலா வந்து தனுஷ்கோடி ரோட்டில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்கு எழுந்தருளினர். ராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்தபின், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. பின் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. விழாவின் மூன்றாம் நாளான இன்று கோயில் சுவாமி சன்னதியில் ராமலிங்க பிரதிஷ்டை வைபவம் நடக்கிறது. உண்டியல் வசூல் ரூ.1.1 கோடி: ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வசூல் ரூ ஒரு கோடியை தாண்டியது. கோடை விடுமுறையை அடுத்து, அதிகளவில் பக்தர்கள் வந்து சென்ற நிலையில், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில் உண்டியல் கடந்த 9 மற்றும் 28ம் தேதிகளில் திறந்து எண்ணப்பட்டது. இதில் ஒரு கோடியே ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 650 ரூபாய், தங்கம் 109 கிராம், வெள்ளி 7 கிலோ 50 கிராம் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !