உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபயவரதேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஜூன்1ல் கோலாகலம்!

அபயவரதேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஜூன்1ல் கோலாகலம்!

சோழவள நாட்டில் காவிரியின் தென்கரையில் சுந்தரரால் வைப்புத்தலமாக பாடப்பெற்றதும் திருவாதிரை நட்சத்திர ஸ்தலமாகவும் அதிவீரராமன் என்னும் மன்னரால் அமைக்கப் பெற்றதுமான அதிராம்பட்டிணம் என்றழைக்கப் பெறும் திருஆதிரையான்பட்டினத்தில் அன்பே வடிவமாக அருள்மிகு ஸ்ரீ சுந்தர நாயகி சமேத அபயவரதேஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கும் தமிழகத்தில் திருவாதிரை நட்சத்திர சிவத்தலமாக இத்திருத்தலம் விளங்கி வருகிறது. இத்தலத்தில் வைகாசி மாதம் 19-ஆம் தேதி (01.06.2012) வெள்ளிக்கிழமை காலை 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் சுந்தரநாயகி சமேத அபயவரதேஸ்வரர் சுவாமிக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற உள்ளது. இராவணன், இரண்யன், இரண்டயாட்சகன், சூரபதுமன் போன்ற அரக்கர்களால் முப்பத்து முக்கோடி தேவர்களை துரத்தி துன்புறுத்தப்படும் போது, அவர்கள் தஞ்சம் புகுந்த உத்தம புனித திருவாதிரை நட்சத்திர ஸ்தலமாகும். ஆதிசிவனுக்கு உரித்தான நித்ய பிரதோஷ நேரத்திலும், திருவாதிரை நாளிலும், பரமேஸ்வரன் அபய ஹஸ்தராக பெருங்கருணையுடன் உலாவருகின்ற உத்தம லோக திருவாதிரை நட்சத்திர கோயிலாகும் இந்த லோகத்தில் நுழைந்திடவே அசுரர்கள் அஞ்சுவர். எனவே தாம் இந்த விஷேசமான திரு ஆதிரை தலத்திலேயே எத்தகைய பாவங்கள் புரிந்தாலும் பக்தி பூர்வமாக உணர்ந்து திருந்திட விழைவோர்க்கு ஸ்ரீ அபய வரதேஸ்வரராக சுவாமி இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார். வைரத மகரிஷி, பைரவ மகரிஷி இருவரும் தினமும் தூலமாகவும் சூட்சுமமாகவும் வழிப்படும் இத்திருத்தலத்தில் திருமண தடை நீங்கியும், குழந்தை பேரு உடன் பெற்றும் ராகு, கேது தோஷம் நீங்கியும் பல ஆயிரம் மக்கள் பலன் பெற்றும் இத்தலத்தில் திருமணம் நடத்தியும் பயன் அடைகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !