2 வெண்கல சிலை திருட்டு - குத்தாலம் அருகே பரபரப்பு
ADDED :1767 days ago
மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஆசிரமத்தில் இருந்த 2 வெண்கல சிலைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாகை மாவட்டம் குத்தாலம் அடுத்த சிவராமபுரம் அக்ரஹாரத்தில் ஸ்ரீ ராகவேந்திரா ஆசிரமம் உள்ளது. கடந்த 17ம் தேதி ஆசிரமத்தில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அரை அடி உயரம், 8 கிலோ எடையுள்ள வீரபிரம்மன் மற்றும் முக்கால் அடி உயரம், 15 கிலோ எடையுடைய ராஜராஜேஸ்வரி சிலை என மொத்தம் 23 கிலோ எடை உள்ள இரண்டு வெண்கல சிலைகள் திருடு போய் இருந்தது.சென்னையிலிருந்து வந்த ஆசிரமத்தின் உரிமையாளர் ஹரி கணேஷ்.45 அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்கு பதிந்து சிலைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சிலைகள் ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.