ஐயப்பன் கோயில் ஆண்டு விழா
ADDED :2094 days ago
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் 48வது ஆண்டு விழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் சிறப்பு வழிபாடு, ஆராதனை, டிச.,17 திருவிளக்கு பூஜை, கூட்டு வழிபாடு நடந்தது. டிச.,18 கணபதி, நவக்கிர ஹோமம் உட்பட உலக நன்மைக்காக பல்வேறு யாகசாலை பூஜை செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பூப்பல்லக்கில் சுவாமி வீதிவுலா வந்து அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.