வெள்ளை மாளிகையில் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாடிய அமெரிக்க அதிபர் டிரம்ப்
ADDED :7 minutes ago
அமெரிக்கா: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், தொழில்முனைவோர் மற்றும் வர்த்தகத் தலைவர்களுடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் எஃப்.பி.ஐ. இயக்குநர் காஷ் படேல், பிரபல சமையல் கலைஞர் விகாஸ் கன்னா, ஐபிஎம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டிரம்ப் தீபம் ஏற்றி வழிபட்டார். அப்போது தொழில்முனைவோர் விஷால் கோண்டல், அவருக்கு ஹனுமான் சாலீசா புத்தகத்தைப் பரிசாக வழங்கினார். வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் பாரம்பரியம் 2003-ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. அந்தப் பாரம்பரியம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிபிடத்தக்கது.