உத்தரகோசமங்கை கோயில் சுவரை சேதமாக்கும் ஆக்கிரமிப்பு
ADDED :1771 days ago
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற சிவாலயமாக விளங்கி வருகிறது. ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் கோயிலுக்கு வருகை தருகின்றனர். 22 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோயிலின் நான்குபுறத்திலும் 20 அடி உயரம் கொண்ட மதில் சுவர் கோயிலுக்கு அரணாக உள்ளது. மங்களநாத சுவாமி கோயிலின் தெற்கு, மேற்குப் பகுதிகளில் மதில் சுவற்றையொட்டி ஏராளமான ஆக்கிரமிப்பு உள்ளது. கோயில் சுவர் அருகே ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கட்டுகின்றனர். அவற்றின் கழிவுகளை அருகருகே கொட்டி வைக்கின்றனர்.வாகனங்கள் நிறுத்தும்இடமாக மாறி வருகிறது.விறகுகள் உள்ளிட்ட கட்டட கட்டுமானங்களை வைத்துள்ளனர். கோயில் ராஜகோபுரம் முன்புறம்உள்ள பிரம்மதீர்த்த தெப்பக்குளத்தில் கடைகள், வீடுகளின் கழிவுநீரும் கலந்து வருகிறது.