உலக நலன் வேண்டி திருவிளக்கு வழிபாடு
ADDED :1818 days ago
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரையில் தெய்வீக தமிழக சங்கம் சார்பில், உலக நலன் வேண்டி திருவிளக்கு வழிபாடு நடந்தது.
நம் சந்ததியினருக்கு நமது கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் மீது நம்பிக்கை ஏற்படுத்தவும், அவர்களின் எண்ணங்கள் திசை மாறாமல் செல்லவும், நம்மவர்களின் கலாச்சாரங்களை, வருங்கால சந்ததியினரும் பின்பற்றும் வகையில், தெய்வீக தமிழக சங்கம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி, நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரை நாதமுனிகள் ராமானுஜ கூடத்தில் தெய்வீக தமிழக சங்கம் சார்பில் திருவிளக்கு வழிபாடு நடந்தது. நிகழ்ச்சிக்கு, சேவாபாரதி, தமிழக பொறுப்பாளர் ராமநாதன் தலைமை வகித்தார். சின்மயா ஆசிரமம், சேவக், பிரம்மச்சாரிணி சரண்யா சைத்தன்யா திருவிளக்கு பூஜை நடத்திக் கொடுத்தார். நிகழ்ச்சியில், திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.