உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் சனிபெயர்ச்சி விழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

பழநியில் சனிபெயர்ச்சி விழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

பழநி:பழநி திருஆவினன்குடி கோயிலில் டிச.27ல் நடைபெறும் சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழநி கோயில் கட்டுப்பாட்டில் குழந்தை வேலாயுத சுவாமி கோவிலான திருஆவினன்குடி உள்ளது. இங்கு சனிபகவானுக்கு தனிசன்னதி உள்ளது.டிச.,27 ல் சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதையொட்டி அன்று அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், அதிகாலை 4:15க்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடக்கிறது. அதன்பின் விநாயகர் பூஜை, கலசபூஜைக்குப்பின், சனிபகவானுக்கு அபிேஷகம், சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.அதிகாலை 5:22 மணிக்கு சனிபெயர்ச்சி தீபாரதனை நடக்கிறது. இந்நிகழ்ச்சிகள் அரசின் கொரோனா விதிகளை பின்பற்றி கோயில் ஆகம விதிப்படி நடைபெறும். இந்நிகழ்ச்சியினால் அன்று அதிகாலை 4:00 மணிமுதல் அதிகாலை 5:30 மணிவரை பக்தர்களுக்கு அனுமதியில்லை.இந்நிகழ்ச்சி யூ டியூப், பேஸ்புக் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என, செயல்அலுவலர் கிராந்திகுமார்பாடி அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !