ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வரும் 27ல் சனிப்பெயர்ச்சி விழா
ADDED :1827 days ago
வாலாஜாபாத் - ராமலிங்கேஸ்வரர் கோவிலில், வரும், 27ம் தேதி, சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத, ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, மேற்கு திசை நோக்கிய நிலையில், சனி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. சனி பரிகாரஸ்தலமாக விளங்கி வருகிறது.நடப்பாண்டு, டிச.,27ம் தேதி, காலை, 5:25 மணி அளவில், தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்கு, சனி பகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார்.இதை முன்னிட்டு, சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் நடைபெற உள்ளது என, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.