உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனிபெயர்ச்சியையொட்டி லட்சார்ச்சனை தொடக்கம்

சனிபெயர்ச்சியையொட்டி லட்சார்ச்சனை தொடக்கம்

கரூர்: சனி பெயர்ச்சியையொட்டி, கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், லட்சார்ச்சனை நடந்தது. நாளை காலை, 5:22 மணிக்கு, சனிபகவான் தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். அதையொட்டி, நேற்று காலை, 8:00 மணிக்கு, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், விநாயகர் பூஜையுடன் லட்சார்ச்சனை துவங்கியது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்றும், லட்சார்ச்சனை மற்றும் நவக்கிர அபி?ஷகம் நடக்கிறது. நாளை அதிகாலை, 3:00 மணிக்கு நவக்கிரக மூர்த்திக்கும், சனீஸ்வர பகவானுக்கும் மூலமந்திர யாகம், அஸ்திரேஹாமம், அபி ?ஷகம் மற்றும் கலாபி ?ஷகம் நடக்கிறது. பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. லட்சார்ச்சனையில், மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !