அண்ணாமலை ஈஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி ஹோமம்
ADDED :1827 days ago
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த எழுத்தூரில் உள்ள உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலை ஈஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு ஹோமம் நடந்தது.
சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து, மகர ராசிக்கு (டிச.27ம் தேதி) காலை 5.22 மணிக்கு பெயர்ச்சியடைகிறார். இதை முன்னிட்டு எழுத்தூரில் உள்ள உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலை ஈஸ்வரர் கோவிலில், நேற்று இரவு ஏழு மணிக்கு கணபதி ஹோமம், முதல்கால யாக பூஜை, சனி பகவானுக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. பூஜைகளை ராஜா மற்றும் பெரியசாமி சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் ஹோமத்தில் பங்கேற்றனர். இன்று காலை புனித கலச நீரினால் சிறப்பு அபிஷேகம் செய்து, சிறப்பு வழிபாடு நடக்கிறது.