உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சனிப்பெயர்ச்சி வழிபாடு

இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சனிப்பெயர்ச்சி வழிபாடு

மதுரை: மதுரை  இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.

சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து, மகர ராசிக்கு இன்று (டிச.27ல் ) காலை 5.22 மணிக்கு பெயர்ச்சியடைந்தார். இதை முன்னிட்டு மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ஸ்தல தலைமை அர்ச்சகர் தர்மராஜ் சிவம் தலைமையில் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !