வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா
ADDED :2082 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், சனி பெயர்ச்சியை முன்னிட்டு நவகிரக பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், சனி பெயர்ச்சியை முன்னிட்டு, அதிகாலை நடை திறக்கப்பட்டு, சன்னதி வளாகத்தில் யாகசாலையில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கலச ஸ்தாபனம், நவகிரக ஆவாகனம், அக்னி காரியம், அன்னம், ஆகியம் சமிது, நூத்தி எட்டு மூலிகைகளால் சனிபகவான் மூலமந்திரம், சாந்தி பரிகார ஹோமங்கள், பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி காலை 5:22 மணிக்கு சனி பகவானுக்கு கலச அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து சுவாமி வழிபாடு செய்தனர்.