புவனகிரி வெள்ளியம்பல சுவாமிகள் மடத்தில் சனிப்பெயர்ச்சி விழா
கடலூர்: புவனகிரி வெள்ளியம்பல சுவாமிகள் மடத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீமீனாட்சி சமேத சோம சுந்தரேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா வெகு விமர்சியாக நடந்தது.
சனிப்பெயர்ச்சி முன்னிட்டு புவனகிரி வெள்ளி அம்பலம் சுவாமிகள் மடத்தில் உள்ள மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள நவக்கிரகங்களில் ஒன்றான சனிபகவானுக்கு அதிகாலை 4:00 மணிக்கு மகா ஹோமும், 5 மணிக்கு மகா அபிஷேகமும் வெகு விமர்சியாக நடத்தினர். தொடர்ந்து காலை 6 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பரிகார ராசியினர் சமூக இடைவெளிவிட்டு, முகக்கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறக்கட்டளை அறங்காவலர் குழுத்தலைவர் ரத்தன சுப்பிரமணியன் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.