மலைக்கோட்டை செல்ல 144 தடை
ADDED :1749 days ago
திண்டுக்கல் : திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு செல்ல 144 தடை விதித்து கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் ஹிந்து, இஸ்லாமிய அமைப்புகள் மலைக்கோட்டைக்கு மேலே சென்று வழிபாடு நடத்த பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.பவுர்ணமியை முன்னிட்டு இன்று (டிச.29) பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க டி.ஐ.ஜி., முத்துச்சாமி பரிந்துரையின் பேரில், நேற்று (டிச.28) மாலை முதல் மறு உத்தரவு வரும் வரை மலைக்கோட்டைக்கு செல்ல 144 தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.