உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹெத்தையம்மன் திருவிழா துவக்கம்

ஹெத்தையம்மன் திருவிழா துவக்கம்

 கோத்தகிரி,:நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழா, மிக எளிமையாக துவங்கியது.நீலகிரியில் வாழும் படுகரின மக்களின் குலதெய்வமான ஹெத்தைம்மன் திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு, கொரோனா நோய் தொற்று காரணமாக, பண்டிகையை மிக எளிமையாக கொண்டாடும் விதமாக, விரதம் இருக்கும் பக்தர்கள், கிராம கோவிலிலிருந்து, மடிமனை கோவிலுக்கு, ஆடல் பாடல் ஏதும் இல்லாமல், அம்மனை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.பக்தர்கள், வீடுகளுக்கு செல்லாமல் அங்கேயே விரதம் இருந்து, சம்பிரதாயப்படி கத்திகை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, வரும் ஞாயிறு (3ம் தேதி) அம்மனை வண்ண குடிகளின் கீழ், மீண்டும் கிராம கோவிலுக்கு அழைத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !