சோழீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
ADDED :1747 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் சோழீஸ்வரர் ஸ்வாமி கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து யாக பூஜைகள் நடந்தது. சிவன் மலை அடிவாரத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த நடராஜர் சிலை உட்பட சுவாமி சிலைகள் கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6 மணி அளவில் சந்திரசேகர், சௌந்தராம்பிகை திருக்கல்யாணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை நடராஜர் சிறப்பு அபிஷேகம், காலை 7 மணியளவில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. காலை 8 மணியளவில் கொடி இறக்கத்துடன் விழா இனிதே நிறைவடைகிறது.