ஆருத்ரா தரிசனத்தையொட்டி பஞ்ச மூர்த்திகள் ஊர்வலம்
ADDED :1736 days ago
கரூர்: ஆருத்ரா தரிசனத்தையொட்டி, கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பஞ்ச மூர்த்திகள் ஊர்வலம் நடந்தது. கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா கடந்த, 21ல் நடராஜர் ரக் ஷா பந்தனம் மற்றும் மாணிக்கவாசகர் திருவெம்பாவை, உற்சவத்துடன் கோவிலில் துவங்கியது. கடந்த, 27ல் மாணிக்க வாசகருக்கு அபி?ஷகம், நடராஜமூர்த்திக்கு திருவெம்பாவை பாடுதல் நடந்தது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம், பிச்சாண்டார் திருவீதி உலா, அம்மன் தீர்த்தவாரிக்கு அமராவதி ஆற்றுக்கு போய் வருதல் நிகழ்ச்சிகளும் நடந்தன. இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடராஜ மூர்த்திக்கு மஹா அபி ?ஷகமும், 10:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் ஊர்வலமும் கோவிலுக்குள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.