மாரியூர் கோயிலில் தீர்த்தவாரி உற்ஸவம்
ADDED :1741 days ago
சாயல்குடி : சாயல்குடி அருகே மாரியூர் பவளநிறவல்லியம்மன் சமேத பூவேந்தியநாதர் கோயிலில் தீர்த்தவாரி உற்ஸவ விழா நடந்தது.
நேற்று முன்தினம் மாலை மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. மாலையில் உலக நன்மைக்காக விளக்கு பூஜை, மாங்கல்ய பூஜை நடந்தது. இரவில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. நேற்று காலை 6:00 மணியளவில் மாரியூர் கடற்கரையில் உற்ஸவ மூர்த்திகள் எழுந்தருளி, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. உத்தரகோச மங்கைகைலாய வாத்தியம் இசைக்கப்பட்டது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதானக் கமிட்டியினர் செய்திருந்தனர். இரண்டு நாட்களிலும் நடந்த விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் வரிசையில் நின்று முகக்கவசம் அணிந்தவாறு சுவாமி தரிசனம் செய்தனர்.