சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1744 days ago
விருத்தாசலம்: எருமனுார் சாலையில் உள்ள பழமலை சாய்பாபா கோவிலில் உலக அமைதி, இயற்கை வளம் செழித்து, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு பொருளாதாரம் வளர்ச்சி பெற வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.பழமலை சாய்பாபா டிரஸ்ட் ரமேஷ் சந்த், வழக்கறிஞர் பாலச்சந்திரன், வாஸ்து நிபுணர் திருநாவுக்கரசர், பொறியாளர் அருள், பாஸ்கரன், வித்யா மந்திர் பள்ளி தாளாளர் விஸ்வநாதன், நெய்வேலி ஐயப்பா சேவா சங்கத்தினர் பங்கேற்றனர்.