உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க 70வது மஹோற்சவ விழா நிறைவு

ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க 70வது மஹோற்சவ விழா நிறைவு

கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க 70வது மஹோற்சவ விழா ஐயப்பசுவாமிக்கு புஷ்பாஞ்சலி, கனகாபிஷேகத்தோடு நிறைவடைந்தது.ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தின், 70வது மஹோற்சவ விழா, டிச.,30ல் காலை4:30 மணிக்கு துவங்கியது. வேதவிற்பன்னர்கள், பண்டிதர்கள், சமயபெரியவர்கள், சான்றோர்கள் புடைசூழ,மஹாகணபதி ஆவாஹனம் செய்து, மகாகணபதி ஹோமம் நடந்தது.

நிறைவு நாளான நேற்று காலை 9:00 மணிக்கு, பஞ்சவாத்தியங்கள் முழங்க திருவாபரண பெட்டியுடன் திருமஞ்சனஉலாவும், 11:00 மணிக்கு ஐயப்பசுவாமிக்கு புஷ்பாஞ்சலி, கனகாபிஷேகமும், மதியம் 1:00 மணிக்கு மகாதீபாராதனையும் நடந்தது.ஐந்து நாட்களாக உற்சாகமாகவும், கோலாகலமாகவும்நடைபெற்ற மஹோற்சவ விழா, புஷ்பாஞ்சலி, கனகாபிஷேகத்தோடும், கோவை ஜெய்ஹிந்த் முரளி பாகவதர் குழுவினரின் திவ்யநாம பஜனையோடும், நேற்று நிறைவடைந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !