ஐயப்ப சுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :1850 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில், குமாரவலசு சாலையிலுள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோவிலில் நேற்று மாலை திருவிளக்கு பூஜை நடந்தது.
கோவில் முன்பு வளாகத்தில் ஐயப்ப சாமி வைக்கப்பட்டு 18 படி பூஜை நடத்தப்பட்டது. ஏராளமான பெண் பக்தர்கள் வாழையிலையில் விளக்கு வைத்து பூஜை செய்து வழிபாட்டில் கலந்து கொண்டனர். முன்னதாக ஐயப்ப சுவாமி சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து இரவு 8 மணி அளவில் அன்னதானம் வழங்கப்பட்டது.