மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
1704 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
1704 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
1704 days ago
பழநி: பழநி தைப்பூசதிருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் நலன்கருதி மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் சிறப்பு பூஜை கள் நடக்கிறது. பழநி முருகன்கோயிலில் ஆண்டுதோறும் தைப் பூசவிழாவிற்காக ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, பாதயாத்திரையாக வருகின்றனர். அவ்வாறு பா தயாத்திரையாக வரும் பக்தர்கள் நலன் வேண்டி பழநி மலைக்கோயிலில் சிறப்பு யாக பூஜை கள் நடைபெறும். இந்தாண்டு சிறப்பு யாகம், நேற்று மலைக்கோயிலில் ஆனந்த விநாயகர் சன்னதியில் நடந்தது. அமிர்தம் குருக்கள், செல்வசுப்ரமணியம் குழுவினர் பாதயாத்திரை கணபதி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தினமும் உபகோயில்களில் இந்த யாகம் நடைபெறும்.பழநி கண்பத் ஓட்டல் உரிமையாளர் ஹரிஹரமுத்தையர், செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார் பங்கேற்றனர். இன்று அடிவாரம் வீரதுர்க்கையம்மன் கோயிலில் அபிஷேகம், சிறப்பு பூஜை கள் நடைபெறும்.
1704 days ago
1704 days ago
1704 days ago