பெருமாள் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
ADDED :1755 days ago
நங்கவள்ளி: ஹிந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, நங்கவள்ளி, பெரியசோரகை, சென்றாயப்பெருமாள் கோவில் கும்பாபி?ஷகம், கடந்த நவ., 19ல் நடந்தது. தொடர்ந்து, 51 நாள் மண்டல பூஜை தொடங்கி, தினமும் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நிறைவு நாளான நேற்று, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாயப்பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.